வி.எல்.பி. கல்லூரியில் “உணவகப் பராமரிப்பு” பயிற்சிப் பட்டறை 

வி.எல்.பி. ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், உணவு விடுதி மற்றும் மேலாண்மைத் துறை சார்பாக, “உணவகப் பராமரிப்பில்  திறன் மேம்பாடு” குறித்த பயிற்சிப் பட்டறை  நடைபெற்றது.

நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக பெங்களூர், ராடிசன் புளூ, வீட்டுப் பராமரிப்பு மேற்பார்வையாளர், மணிகண்டன்  பங்கேற்றார். அவர் பேசுகையில், படுக்கைகளை உருவாக்குதல், குளியலறைகள் மற்றும் படுக்கை அறைகளைச் சுத்தம் செய்தல், தூய்மையாக வைத்திருத்தல், கறை நீக்குதல், மடிப்பு துண்டுகள், போர்வைகள், உறைகள் மற்றும் உணவகங்களின் பாத்திரங்களைப் பயன்படுத்தும் முறைகள் குறித்து விரிவாக விளக்கினார். மேலும், ஐந்து நட்சத்திர உணவு விடுதிகளின் முக்கியத்துவம் குறித்தும் அதன் பராமரிப்பு குறித்தும் எடுத்துரைத்தார்.