ஆர். வி.கலை கல்லூரியில் அப்துல் கலாம் பிறந்தநாள் விழா!

டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் பிறந்த தினத்தை முன்னிட்டு  ஆர். வி.கலை அறிவியல் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் ஞாற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆண்டுதோறும் டாக்டர்.அப்துல் கலாமின் பிறந்த தினத்தை இளைஞர் எழுச்சி நாளாக  கொண்டாடப்படுகிறது. அதன் வகையில் கலாம் விதைகள் அறக்கட்டளை மற்றும் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி மற்றும் ஓவியப்போட்டிகள் நடத்தின.

இப்போட்டிகளில் காரமடை சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த  170 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

சிறப்பு விருந்தினராக காரமடை கலாம் விதைகள் அறக்கட்டளையின் நிறுவனர் கனிஷ்குமார் மற்றும் புகழ் தொலைக்காட்சி நிறுவனர் ஜான்சன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

இதனைத் தொடர்ந்து பரிசளிப்பு விழாவில் கல்லூரி முதல்வர் சி.என்.ரூபா பங்கேற்று, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், பங்கேற்ற  மாணவர்களுக்குச் சான்றிதழ்கள், பரிசுகள், நினைவுப் பரிசாக  மரக்கன்றுகள் வழங்கினார்.

இதில் கல்லூரிப் பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள், புகழ் தொலைக்காட்சியின் செய்தியாளர்கள், உறுப்பினர்கள், பெற்றோர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.