ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் மாபெரும் பேரணி

“சர்வதேச செவிலியர் தினத்தை” முன்னிட்டு “நமது செவிலியர்கள், நமது எதிர்காலம் – கவனிப்பின் பொருளாதார சக்தி” என்ற கருப்பொருளுடன், செவிலியர்களின் இடை விடாத சேவைக்கு நன்றி தெரிவிப்பதற்கும், சுகாதாரத் துறையில் அவர்களின் பணி நிலை குறிக்கவும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மாபெரும் பேரணியை நடத்தியது.

ஸ்ரீ ராமகிருஷ்ணா  மருத்துவமனை “நமது செவிலியர்கள், நமது எதிர்காலம் – கவனிப்பின் பொருளாதார சக்தி” என்ற கருப்பொருளுடன்  பேரணியை நடத்தியது.

நிகழ்வை எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் லட்சுமி நாராயணசுவாமி மற்றும் எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளை முதன்மை இயக்கு அலுவலர் சுவாதி ரோஹித் ஆகியோர் கொடியசைத்துத் துவக்கி வைத்தனர்.

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையைச் சேர்ந்த சுமார் 200 செவிலியர்கள் தாங்களாற்றும் சேவைகள் மற்றும் சுகாதாரத் துறையில்  தங்களது பங்களிப்பு குறித்து வாசகங்கள் அமைந்த பதாகைகள்  ஏந்திப் பேரணியில் பங்கேற்றனர்.

இதன் மூலம்  ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை நிர்வாகம் நோயாளிகளைப் பராமரிப்பதில் செவிலியர்களின்  அர்ப்பணிப்பு மற்றும் சிகிச்சையின் போது அவர்களின் குடும்பத்தாரின் மனநிலையறிந்து பக்கபலமாக இருப்பதை அங்கீகரித்தது. அதே நேரத்தில் இளைய தலைமுறையினரை சுகாதாரத்துறையின் எதிர்காலத்திற்காகச் செவிலியர் பணியைத் தேர்வு செய்யவும் ஊக்குவித்தது.