இந்துஸ்தான் கல்லூரியில் மாநில அளவிலான பயிற்சி!

இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமூகப் பாதுகாப்புப் பிரச்சினைகள் குறித்த மூன்று நாள் மாநில அளவிலான பயிற்சி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் தேசிய சமூக பாதுகாப்பு நிறுவனம், டெல்லி சமூக நீதி மற்றும் மேம்பாட்டு அமைச்சகம் மற்றும்  இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சமூகப் பணித்துறை இணைந்து பயிற்சிகளை நடத்துகின்றன.

இதன், தொடக்க நிகழ்வு செவ்வாய்கிழமை கல்லூரியின் சி.வி ராமன் அரங்கத்தில் நடைபெற்றது. தொடக்க விழாவிற்கு தலைமை விருந்தினராக கமலக்கண்ணன், உதவி இயக்குனர் மற்றும் கோவை கலெக்டர் உதவியாளர் (வளர்ச்சித்துறை), கல்லூரி முதல்வர் முனைவர். பொன்னுசாமி, சமூகப்பணி துறைத்தலைவர் புனிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மக்கள் நலனுக்கான அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் கிடைப்பதை வலியுறுத்தி, பிரச்சினைகளை எதிர்த்துப் போராடுவதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் முன்கூட்டியே ஈடுபடுமாறு பங்கேற்பாளர்களிடம் வலியுறுத்தி பேசிய கமலக்கண்ணன்,

போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் சமூகத்திற்கு அதன் அச்சுறுத்தல் காரணமாக அதிகரித்து வரும் குற்ற விகிதங்கள், டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்தி விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் வயதானவர்களின் பிரச்சனைகளுக்குப் புதுமையான தீர்வுகளைக் கண்டறிய பங்கேற்பாளர்களை ஊக்குவித்தார். முடிவில், சமூகப் பணித் துறைத் தலைவர் டாக்டர் எம்.புனிதா நன்றியுரை ஆற்றினார்.