அத்தி என்ற மருத்துவ பெட்டகம்! #தினம்ஒருதகவல்

பண்டைய எகிப்தியர்கள் இந்த அத்திப்பழங்களை சுவையூட்டிகளாகப் பயன்படுத்தினார்கள். மத்திய கிழக்கு நாடுகளில் பெரும்பாலான உணவுகளில் அத்திப்பழங்களைக் காணமுடியும்.

உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் அத்திப்பழங்களை தங்கள் உணவுகளில் எடுத்துக் கொண்டாலே போதும். ஏனெனில், பசியைக் கட்டுப்படுத்தும் குணம் அத்திப்பழத்திற்கு உண்டு. இதில், ஆன்டிஆக்ஸிடன்ட் தன்மை இருப்பதால் சில வகையான புற்றுநோய்களைத் தடுக்கும் ஆற்றல் இருப்பதால் அத்திப்பழம் ஒரு ஊட்டச்சத்து பெட்டகம்.

அத்தகைய அத்திப்பாக்கங்களைப் பழமாக சாப்பிடுவதைவிட,  உலர்ந்த பழமாக சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான அணைத்தது ஊட்டச் சத்துக்கள் கிடைக்கும். இதில், மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் கே,  போன்ற சத்துக்கள் அதிகளவில் இருக்கிறது. இதனைத் தினமும் எடுத்துக் கொண்டால் ஏற்படும் நன்மைகளைக் குறித்துப் பார்ப்போம்..,

அத்தியில் அதிக அளவில் நார்ச்சத்து இருப்பதால் ஒரு நாளைக்கு 1 அல்லது 2 உலர் அத்தியை சாப்பிட்டால் மலச்சிக்கல் சீர் செய்ய உதவுகிறது. பசியைக் கட்டுப்படுத்தும் தன்மை அத்தியில் இருப்பதால் உடல் எடையைக் குறைப்பதற்கு அத்தி இன்றியமையாததாக உள்ளது.

உடலில் பொட்டாசியம் சத்துக்கள் ஏற்றத்தாழ்வாக இருக்கும் நிலையில் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. உலர்ந்த அத்தியில் பொட்டாசியம் சத்து இருப்பதால் தினமும் சாப்பிட்டு வந்தோமேயானால் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும். மேலும், செரிமான ஆரோக்கியத்திற்கும் சிறந்த காரணியாக அத்தி செயல்படுகிறது.

மேலும், பண்டைய கிரேக்கியர்கள் கர்ப்பம் தரிப்பதற்காக அத்திப் பழங்களை முதன்மையாக எடுத்துக் கொண்டார்கள். மருத்துவ பயன்பாட்டிற்கும் அத்தி பெருமளவில் பயன் படுத்தப்படுகிறது. இத்தகைய சிறப்புமிக்க அத்தியைத் தினமும் எடுத்துக் கொண்டு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவோம்.