தடாலடியாக குறைந்த சிறு தானிய உணவுகளின் ஜிஎஸ்டி

டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில்  52வது ஜிஎஸ்டி கவுன்சில்  கூட்டம் நடைபெற்றது. இதில் சிறு தானியங்களின் மூலம் தயாரிக்கப்படும் உணவு பொருட்கலின்  ஜிஎஸ்டி வரி அளவை தடாலடியாக குறைக்க முடிவு செய்யப்பட்டது.

மக்கள் மத்தியில் சத்துக்கள் மிகுந்த சிறுதானியத்தின் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில்  மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது பலரும் சிறுதானியங்களை உட்கொள்ளவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில்  சிறு தானியங்களால் செய்யப்படும் உணவுப்பொருள்கள் ஜிஎஸ்டி வரி 18% லிருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. சிறுதானியங்களின் பலன் அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடையும் வகையிலும், அதனை அனைவரும் சாப்பிட ஊக்குவிக்கும் வகையிலும்  சிறு தானிய உணவுகளின் மீது ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது.