திமுக செயலாளர் நா.கார்த்திக்‌ ஆய்வு

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி, ராமநாதபுரம் பகுதிக் கழகம், வார்டு எண்:63, பூத் எண்:37, 33 மற்றும் பூசாரி மாரியப்பன் வீதியில்,  பிஎல்ஏ-2 பாக முகவர்,  பாக முகவர் குழு உறுப்பினர்கள் ஆகியோரை மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக்‌ Ex.M.L.A ., நேரில் சென்று சந்தித்தார். மேலும், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணிகள், பூத் கமிட்டிப் பணிகள், ஓஎம்ஆர் சீட் ஆகிய பணிகள் நடைபெறுவது குறித்துப் பார்வையிட்டு, தகுந்த ஆலோசனைகளை வழங்கினார்.

இதில் ராமநாதபுரம் பகுதிச் செயலாளர் பசுபதி, 63 வது வட்டக்கழகச் ‌செயலாளர் சண்முகசுந்தரம், பூத் எண்: 37: பிஎல்ஏ-2 பாக முகவர் பார்வதி, பூத் எண்:33,பிஎல்ஏ-2 பாக முகவர் கணேசன் ஆகியோர் உடனிருந்தனர்.