ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பன்னாட்டுக் கருத்தரங்கம்!

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் கணினி நுண்ணறிவு மற்றும் உயிர் அறிவியல் தொடர்பான பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது.

கல்லூரியின் கணினி அறிவியல், உயிர்வேதியியல், நுண்ணுயிரியல் மற்றும் கணிதவியல் துறைகள் இணைந்து நடத்திய இக்கருத்தரங்கில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் மூத்த தொழில்நுட்ப அதிகாரியான கிருஷ்ணகுமார் சிறப்புவிருந்தினராகக் கலந்துகொண்டு, சமுதாய முன்னேற்றத்துக்கு உதவும் வகையில் அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்வது பற்றி மாணவர்களிடம் உரையாற்றினார்.

அதையடுத்து, தென்கொரியாவிலிருந்து டேட்டா அனாலிஸ்ட் வல்லுனரான ஸ்டார்ம் ஸ்கட் மற்றும் சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் மாலிகுலார் பயாலஜி மற்றும் ஸ்டெம் செல் ஆய்வியல் துறை இணைப்பேராசிரியர் ஜாக்சன் துரைராஜ் ஆகியோர் கலந்து கொண்டு அறிவியல், தொழில்நுட்ப ஆய்வுகள் மற்றும் ஆய்வாளர்களின் சமூகப்பங்களிப்புக் குறித்த கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

இதில் பல்வேறு கல்லூரிகளிலிருந்து சுமார் 160 ஆய்வறிஞர்கள், துறை வல்லுனர்கள் பங்கேற்றனர்.