யுவராஜ் சிங்க்கு கேப்டன் பதவி கிடைத்திருக்க வேண்டும் – ரோகித் சர்மா

யுவராஜ் சிங்க்கு கேப்டன் பதவி கிடைத்திருக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்

கடந்த 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் களம் கண்ட கோலி தலைமையிலான இந்திய அணி அரையிறுதி வரை சென்று தோல்வியை தழுவியது. அதற்கு முன்னதாக தோனி தலைமையிலான அணி 2013 ஆண்டில் கடைசி ஐசிசி கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடதக்கது. இதன் பின்னர் சுமார் 10 ஆண்டுகளாக இந்திய அணிக்கு உலகக்கோப்பை கைக்கு எட்டாத கனியாகவே இருக்கிறது, இந்த வருடம் ரோஹித் தலைமையிலான இந்திய அணி உலகக்கோப்பையை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு கிரிகேட் ரசிகர்களிடம் எழுந்துள்ளது.

“யுவராஜ் சிங் தலைசிறந்த வீரர்”

இந்நிலையில், ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் முதல்முறையாக கேப்டனாக பங்கேற்கும் ரோகித் சர்மா, கேப்டன்ஷிப் பற்றி பேட்டி ஒன்றில் மனம் திறந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, “26,27 வயது தான் ஒருவர் அணிக்கு கேப்டன் ஆகா சரியான தருணம், ஏனெனில் அப்போது தான் ஒரு வீரர் தனது உச்சகட்ட திறனுடன் இருப்பார்” என கூறிய அவர்,

 

இந்திய அணியின் கேப்டன்சிப் பற்றி பேசினால், இதற்க்கு முன்னதாக தோனி, கோலி போன்றவர்கள் இந்திய அணிக்கு தலைமைதாங்கினார்கள், இப்பொது எனக்குவாய்ப்பு கிடைத்துள்ளது. இந்திய அணி யுவராஜ், வீரேந்திர சேவாக் , கெளதம் கம்பீர் போன்ற பல ஜாம்பவான்களை உள்ளடக்கியது, இருப்பினும் அவர்களுக்கு கேப்டன் ஆகா வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் அவர்கள் இந்திய அணிக்கு அளித்தது பெரும்பங்காகும். யுவராஜ் சிங் தலைசிறந்த வீரர், மேட்ச் வின்னர், அவர்க்கு கேப்டன் பதவி கிடைத்திருக்க வேண்டும், அனால் கிடைக்கவில்லை அதுதான் வாழக்கை. வாய்ப்பு கிடைக்கும் வரை காத்திருந்தேன், அது இப்போது எனக்கு கிடைத்துள்ளது. இந்த காத்திருப்பு நியாமானது. அதற்க்கு நான் உண்மையாக இருப்பேன் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சஹ்ரமா தெரிவித்தார்.