கூட்டணி குறித்து தேசிய தலைமை தான் முடிவெடுக்கும்

“அதிமுக மூத்த தலைவர்கள் டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தியது ஊடகங்களின் வாயிலாக தான் எனக்கு தெரியும்” என்று பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.

மேலும் அவர் கூறிகையில், “சில ஊடகங்கள், நான் அதிமுக உடனான பேச்சுவார்த்தையில் இருந்ததாக தவறான செய்திகளை பரப்புகின்றனர். மகளிருக்கான 33 % இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டதால் பிரதமர் மோடிக்கு பாராட்டு விழா நடந்தது. அதில் கலந்துகொண்டு தற்போது கோவைக்கு வருகிறேன்.

என் மண் என் மக்கள் பாதயாத்திரையில் மாநிலத்தலைவர் அண்ணாமலை கோவைக்கு விரைவில் வரவிருப்பதால் அதற்கான பணிகள் தொடங்கவுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவின் மூலம் பிற அரசியல்கட்சிகளின் கருத்துக்களை கேட்க முடியும். கூட்டணி குறித்து தேசிய தலைமை தான் முடிவெடுக்கும்” என்றார்.