பிரமிக்க வைக்கும் இலங்கை சுற்றுலா தலங்கள்!

சுற்றுலா துறையை மேம்படுத்தும் நோக்கில் இந்தியா உள்ளிட்ட ஏழு நாடுகளிருந்து இலங்கைக்கு வர விசா தேவையில்லை எனும் புதிய அறிவிப்பை அந்நாட்டு அரசு அறிவித்திருப்பது சுற்றுலா பயணிகளை மிக மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது.

இந்நிலையில், இலங்கைக்கே உரித்தான பாரம்பரிய உணவு, கொட்டிக்கிடக்கும் வளம், மத்திய மலைநாட்டு இயற்கை காட்சிகள், மற்றும் விருந்தினர்களை உபசரிக்கும் தன்மை என பல்வேறு காரணங்களால் வேறு எந்த நாட்டையும் விட தனித்தன்மையோடு திகழும் இலங்கையில் கட்டாயமாக பார்த்து ரசிக கூடிய சில  இடங்கள் பற்றி இங்கே காணலாம்….

சிகிரியா:

சிகிரியா – தம்புள்ள பயண அனுபவம். பயணத்தையும் இசையையும் போல மனதை… | by கரிகாலன் | Medium

சிகிரியா, இலங்கையின் தனித்துவமான நிலப்பரப்பை கொண்டு அமைந்துள்ள ஒரு சிறந்த இடமாகும்.  ஐந்தாம் நூற்றாண்டில் காசியப்பா மன்னரால் கட்டப்பட்ட இவ்விடத்தை லையன் ராக் என்றும் காஸ்யப மாளிகை என்றும் அழைக்கப்படுகிறது.  சுமார் 180 மீட்டர் உயரத்தில் இருக்கின்ற சிகிரியா குன்றானது ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் (UNESCO) பாதுகாக்கப்பட வேண்டிய உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு வடிவமைக்கப்பட்டுள்ள கட்டிடக் கலையானது சுற்றுலா பயணிகளை கண்கவர செய்கின்றது.

கண்டி:

மீண்டும் அதிர்ந்த கண்டி ... காரணம் என்ன?

மலை நகரான கண்டி சிங்கள மன்னர்களின் கோட்டையாக இருந்தது. கண்ணுக்கினிய அழகுடன் கூடிய கண்டி ஏரி இலங்கையில் பார்க்க சிறந்த இடங்களில் ஒன்றாகும். மேலும், பேராதனா தாவரவியல் பூங்கா, கண்டி தேசிய அருங்காட்சியகம், ராயல் தாவரவியல் கார்டன் உள்ளிட்ட இடங்களும் இங்கு சுற்றுலா பயணிகளை கண்கவர செய்கிறது.

நுவரெலியா :

நுவரெலியாவில் பார்க்க வேண்டிய 32 இடங்கள் - இலங்கையில் சிறந்த தரமதிப்பீடு பெற்ற சுற்றுலாத்தலங்கள் | இலங்கை பயண பக்கங்கள்

பிரிட்டிஷாரின் காலத்தில் இருந்தே, சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது  நுவரெலியா நகரம். பசுமையான நில பரப்பில் எப்போதும் குளிந்த நிலையில், அமைதியான சூழலை கொண்டுள்ள இப்பகுதியில் டீ எஸ்டேட்கள் அதிகம் உள்ளன.

இங்கு கிரிகோரி ஏரி, குயின் விக்டோரியா பார்க், சீதா அம்மன் கோவில், பொம்புரு எல்லா நீர்வீழ்ச்சி, ஹக்கல தாவரவியல் பூங்கா போன்ற இடங்களை கட்டாயமாக பார்த்து அற்புதமான அனுபவத்தை பெறுங்கள்.

அனுராதாபுரம்:

Anuradhapura- The Sacred City in Sri Lanka - Magnificent Sri Lanka

இலங்கையின் மிக பழமையான  நகரமான அனுராதாபுரம் நாட்டின் மிக பழமையான தொல்பொருள் தலங்களில் ஒன்றாகவும், யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தலமாகவும் விளங்குகிறது. மேலும் இது பண்டைய காலங்களில் பௌத்தத்தின் முக்கிய மையமாக இருந்ததால் பௌத்தர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பார்வையாளர்  மடங்கள், அரண்மனைகள், கோவில்கள் ஆகியன இலங்கையின் வளமான வரலாறு மற்றும் கலாச்சாரத்திற்கு எடுத்துக்காட்டாக வழங்குகிறது.

இங்கு ருவன்வெலிசாய ஸ்தூபம், ஜெய ஸ்ரீ மகா போதி மரம்,ஜெதவனராமாயை, தொல்லியல் அருங்காட்சியகம்,மிகிந்தலை போன்ற பிரபலமான இடங்கள்  இலங்கையின் வரலாற்று மற்றும் மத பாரம்பரியத்தை ஆராய்வதற்கு  ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது.