என்.ஜி.பி. கல்லூரியில் “உலக கடல்சார் நாள்” கருத்தரங்கம்

டாக்டர். என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரியில்  “உலக கடல்சார் நாள்” என்ற கருத்தரங்கம் நிகழ்ச்சி அண்மையில் நடந்தது.

கோவை கடல்சார் கல்லூரியின் மேலாண்மை ஆய்வுகள் இயக்குநர் செந்தில் குமார், என்.ஜி.பி கல்வி நிறுவனங்களின் இயக்குநர் முத்துசாமி மற்றும்  கல்லூரி முதல்வர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

இந்த கருத்தரங்கின் மூலம் இந்தியா மற்றும் வெளிநாட்டு கடல் துறைமுகங்கள், கப்பல் லைனர்கள், கடல் ஒப்பந்தங்கள், கொள்கலன்கள், கடல் வழிகள் மற்றும் கப்பல் இடைத்தரகர்கள் போன்ற பல்வேறு கடல்சார் பிரிவுகளை பற்றி மாணவர்கள் தெரிந்துகொண்டனர். அதோடு துறைமுக செயல்பாடுகள், லைனர்கள் மற்றும் சர்வதேச கடல்சார் ஒப்பந்தங்கள் பற்றிய கருத்துகளையும் அறிந்து கொண்டனர்.

இதில் சுமார் 250 மாணவர்கள், கல்லூரி பேராசியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.