இளைஞரின் முன்னோடி விவேகானந்தர்

சக்தி தகவல் மற்றும் மேலாண்மை கல்லூரியில் தேசிய இளைஞர் தினம் கொண்டாடப்பட்டது.

சக்தி தகவல் மற்றும் மேலாண்மை கல்லுாரியில் விவேகானந்தரின் 161வது பிறந்த நாளை முன்னிட்டு தேசிய இளைஞர் தினம் கொண்டாடப்பட்டது . நிகழ்விற்கு கல்லூரி துறைத் தலைவர் தியாகு  தலைமை தாங்கி பேசினார்.  அதில் விவேகானந்தர் இளைஞர்களுக்கு ஒரு முன்னுதாரனமாக திகழ்ந்தவர். எதிர்கால இந்தியாவை வளமாகவும், வலிமையாகவும் மாற்றும் சக்தி இன்றைய இளைஞர்களிடம் உள்ளது.  அதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும் அவரின் சிந்தனைகள் மற்றும் போதனைகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்று கூறினார்.

மேலும், விவேகானந்தரின் போதனைகளை மாணவர்கள் எப்படி எடுத்துக் கொள்வது மற்றும் இன்றைய மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் அதை சாதனையாக்குவது குறித்தும் உரை நிகழ்த்தினர்.