கொசினா ஐம்பெரும் விழாவில் வயதான தொழிலாளருக்கு நிதியுதவி திட்டம்

கொசினா எனும் கோயமுத்தூர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசன் சார்பாக ஐம்பெரும் விழா ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கலையரங்கில் நடைபெற்றது. உறுப்பினர்களுக்கு விபத்து காப்பீடு, உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை, வயதான தொழிலாளருக்கு நிதி உதவி வழங்குதல் , புதிய உறுப்பினர்கள் சேர்த்தல், மற்றும் பசுமை விழிப்புணர்வு என ஐம்பெரும் விழாவாக நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழா கொசினா தலைவர் முத்தமிழ் செல்வன் தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவில் கிரடாய் தலைவர் குகன் இளங்கோ, திருப்பூர் மாவட்ட கட்டிடப் பொறியாளர்கள் சங்க தலைவர் சிவசுப்பிரமணி, தாராபுரம் கட்டடப் பொறியாளர்கள் சங்க தலைவர் முருகானந்தம், தாராபுரம் நகராட்சி தலைவர் பாபு கண்ணன், மேட்டுப்பாளையம் கட்டட பொறியாளர் சங்க தலைவர் கார்த்திகேய பிரபு மற்றும் காங்கேயம் கட்டட பொறியாளர் சங்க தலைவர் நடராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

விழாவில் செய்தியாளர்களிடம் முத்தமிழ்செல்வன் பேசுகையில் குவாரி தொடர்பான பொருட்களின் விலையேற்றத்தில் அரசு நி்ந்தர தீர்வாக ஒரு வருடத்திற்கு மூலப்பொருட்களின் விலையை நிரந்தரம் செய்ய வேண்டுமென்று கோரிக்கை விடுத்தார். மேலும் கட்டுமானம் துறையில் வரைபட அனுமதி தொடர்பான கோரிக்கைகள் கோப்புகள் அளவிலே இருப்பதால் உடனடியாக துறை சார்ந்த அமைச்சர் இது தொடர்பாக தீர்வு காண வேண்டுகோள் விடுத்தார்.