தென்னிந்திய திருச்சபைகளின் வாலிபர் அமைப்பு சார்பில் கருப்பு சட்டை ஆர்ப்பாட்டம்

கோவையில் தென்னிந்திய திருச்சபைகளின் வாலிபர் அமைப்பு சார்பாக பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து கருப்பு சட்டை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு வன்முறைகளுக்கு எதிராக தென்னிந்திய திருச்சபைகள் சார்பாக ஒவ்வொரு வியாழக்கிழமையும் கருப்பு சட்டை அணிந்து திருச்சபையினர் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக கோவை திருமண்டல தென்னிந்திய திருச்சபைகளின் வாலிபர் அமைப்பினர் சார்பாக கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தென்னிந்திய திருச்சபைகள் மண்டல அலுவலகம் முன்பாக கருப்பு சட்டை அணிந்தபடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் நாடு முழுவதும் நடைபெறும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து கருப்பு சட்டை அணிந்த இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் கலந்து கொண்டனர்.

மேலும், தென்னிந்திய திருச்சபைகளின் கோவை மண்டல பிஷப் திமோத்தி ரவீந்தர் அறிவுறுத்தலின் பேரில் நடைபெற்ற இதில்,பொருளாளர் டி.எஸ்.அமிர்தம்,செயலாளர் பிரின்ஸ் கால்வின்,துணை தலைவர் டேவிட் பர்ணபாஸ்,வாலிபர் அமைப்பு நிர்வாகிகள் ப்ரீத்தி கரோலின்,ஜேகோ சாமுவேல், உட்பட தென்னிந்திய திருச்சபைகள் கோவை மண்டல நிர்வாகிகள்,உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.