கே.பி.ஆர். பொறியியல் கல்லூரியில் தொழில்நுட்ப போட்டிகள் !

கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் கட்டிட பொறியியல் துறை ‘காலிகிரேட்ஸ் 2023’ எனும் தேசிய அளவிலான தொழில்நுட்ப போட்டிகளை அண்மையில் நடத்தின.

இதில் கட்டுரை சமர்ப்பித்தல், சுவரொட்டி விளக்கக்காட்சி, திட்ட விளக்ககாட்சி, தொழில்நுட்ப வினாடிவினா, கணினியை கொண்டு வடிவமைத்தல் மற்றும் மீச்சிறு மாதிரி தயாரித்தல் ஆகிய போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு கல்லூரிகளிலிருந்து 350க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக  “கோம்டேன் கன்சல்டிங் இன்ஜினீயர்ஸ் பிரைவேட் லிமிட்” நிறுவனத்தின் இயக்குநர் எஸ். ஹரிஹரசுதன் கலந்துகொண்டு, வளர்ந்து வரும் சூழலுக்கு ஏற்றவாறு உள்கட்டமைப்புகளை நிலையாக மற்றும் நெகிழ்வாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.

இதையடுத்து, கல்லூரியின் முதல்வர் இராமசாமி கட்டிட பொறியியலின் இன்றியமையாமை குறித்து விளக்கினார்.

இப்போட்டியானது,  பல்வேறு துறையை சார்ந்த பொறியியல் மாணவர்களுக்கிடையே அறிவு பரிமாற்றம் மற்றும் கூட்டுமுயற்சிக்கு வழிவகை செய்யும் வகையில் இடம்பெற்றது.

மேலும், போட்டியில் வெற்றி பெற்றவர்களை சிறப்பு விருந்தினர், கல்லூரி முதல்வர் மற்றும் துறைத்தலைவர் அனுஷா ஆகியோர் பாராட்டி ஊக்குவித்தனர்.