பயணத்தின் போது முகம் சோர்வடைகிறதா?

புத்துணர்ச்சியுடன் இருக்க இதை செய்யுங்கள்

சூரியன் கதிர்களில் இருந்து உங்கள் சருமத்தைப் பாதுகாக்க எப்போதும் உயர்தர சன்ஸ்கிரீனைப் நீங்கள் எங்கு சென்றாலும் உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.

பயணம் என்பது வாழ்க்கையில் நிகழும் ஒரு அற்புத தருணமாகும். வேலைக்காக பயணம் செய்வது ஒரு புறம் இருந்தாலும் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் பயணம் அல்லது நெடுந்தூரப் பயணம் மேற்கொள்வது மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

வெளியில் செல்வது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தாலும், மாசு மற்றும் தூசியின் காரணமாக சருமம் தொய்வடைந்துக் காணப்படும். இந்த நேரத்தில் சரியான தோல் பராமரிப்பு என்பது அவசியமான ஒன்று. எனவே இந்நேரத்தில் சருமத்தின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க, நீங்கள் என்ன செய்ய வேண்டும்? என்பதை பற்றி அறிந்துகொள்ளலாம்.

மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள்.

தோல் பராமரிப்பு : பொதுவாக வெளியில் சென்றாலே சருமத்தில் அழுக்குகள் அதிகளவில் படியும். அதிலும் நெடுந்தூர பயணம் செய்யும் போது காற்று மாசுபாட்டினால் முகத்தில் அதிகப்படியான அழுக்குகள் சேர்வதற்கு வாய்ப்புகள் அதிகம். எனவே உங்களது முகத்தை ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது கழுவ வேண்டும்.

மாய்ஸ்சரைசர் பயன்படுத்துதல் : வெயில் காலத்தில் மட்டுமில்லை குளிர்காலத்திலும் உங்களது சருமம் வறண்டு போகும். எனவே நீங்கள் எப்போதும் பயணம் செய்தாலும் உங்களுடன் மாய்ஸ்சரைசரை எடுத்துச் செல்ல வேண்டும். இது சருமத்தில் உள்ள அழுக்கு, தூசிகள் பாதிப்பு ஏற்படுத்தாமல் தடுக்கிறது. எனவே முகத்தை நீங்கள் கழுவியவுடன் ஈரப்பதத்துடன் மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்தவும். இது சருமத்துளைகளில் ஏற்படும் பாதிப்பைத் தடுப்பதோடு, மென்மையான மற்றும் மிருதுவான சருமத்தைப் பெறுவதற்கு உதவியாக உள்ளது.

டோனர் : வெயிலில் அல்லது குளிரில் வெளியில் செல்லும் போது சருமத்தில் ஏற்படும் வறட்சி மற்றும் எரிச்சலைக் குறைக்க வேண்டும் என்றால் டோனரை நீங்கள் பயன்படுத்தலாம். இது தோலிலின் பிஎச் அளவைப் பராமரிப்பதோடு எதிர்காலத்தில் சருமத்தில் ஏற்படும் வெடிப்புகள் மற்றும் மந்தமானத் தன்மையைத் தடுக்கிறது.

சன்ஸ்கிரீன் : சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்களில் இருந்து உங்கள் சருமத்தைப் பாதுகாக்க எப்போதும் உயர்தர சன்ஸ்கிரீனைப் பாதுகாக்க எப்போதும் உயர்தர சன்ஸ்கிரீனை நீங்கள் எங்கு சென்றாலும் உடன் எடுத்துச் செல்ல வேண்டும். இது தோலில் சருமத்தை வெயிலில் இருந்து பாதுகாக்கிறது மற்றும் பயணத்தின் போது எவ்வித சரும பாதிப்பும் இல்லாமல் அதிக நேரம் நீங்கள் செலவிடலாம். இருந்தப்போதும் ஒவ்வொரு சில மணி நேரங்களுக்கு நீங்கள் சன்ஸ்கிரீனை உபயோகித்தால் கூடுதல் பாதுகாப்பாக அமையும். இதுப்போன்ற விஷயங்களை நீங்கள் எங்கு பயணம் செய்தாலும் உடன் எடுத்துச் சென்றால், நிச்சயம் உங்களது சருமம் பளப்பளப்புடன் மற்றும் உற்சாகத்துடன் காட்சியளிக்க உதவியாக இருக்கும்.

 

 

 

SOURCE :NEWS18TAMIL ..LIFESTYE