ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து ட்விட்டர் நீக்கம்?

 எலான் மஸ்க் ட்விட்டரில் தகவல்!

ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து ட்விட்டர் நீக்கிய நிலையில் தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்துடன் தற்போது மோதலில் ஈடுபட்டுள்ளார் எலன் மஸ்க்.

எலன் மஸ்க் பல அதிரடி மாற்றங்களை செய்து வருகின்றார். ஊழியர்கள் பணி நீக்கம், ப்ளூ டிக் வசதிக்கு மாத சந்தா என பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டார் எலன் மாஸ்க். அதுமட்டுமல்லாமல் பங்குகள் வீழ்ச்சி, விளம்பரதாரர்களின் புறக்கணிப்பு என அடுத்தடுத்து சிக்கல்களிலும் சிக்கியுள்ளது ட்விட்டர்.

இந்த நிலையில் ஆப்பிள் நிறுவனத்துடன் தற்போது மோதலில் ஈடுபட்டுள்ளார் . ஆப்பிள் நிறுவனம் ட்விட்டர் விளம்பரங்களில் செலவு செய்வதை நிறுத்திவிட்டதாகவும், விரைவில் ட்விட்டரை அதன் ஆப் ஸ்டோரிலிருந்து நீக்க உள்ளதாகவும் மஸ்க் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் கருத்து சுதந்திரத்தை ஆப்பிள் வெறுக்கிறதா எனக் கேள்வி எழுப்பி ட்விட் செய்தார். மேலும் மஸ்க் தனது அடுத்தடுத்த ட்விட்களை ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக்கை டேக் செய்து பதிவிட்டார்