வேளாண் பல்கலையில் 112 வது மாணவர் மன்ற துவக்க விழா

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 112-வது மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது.

இவ்விழாவில் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி கலந்துகொண்டு, மாணவர்களின் திறமையை வெளிக்கொணரும் வகையில் இதுபோன்ற பல்வேறு மன்ற செயல்பாடுகளில் மாணவர்களை ஈடுபடுத்திக் கொள்ள அறிவுறுத்தினார். மேலும், அவர் தனது வேளாண் கல்லூரி அனுபவங்களையும் மாணவர்களிடையே பகிர்ந்து கொண்டார்.

மேலும், இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக முதன்மையர்கள், மாணவர் மன்ற ஆலோசகர்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.