சங்கரா கல்லூரியில் ‘நயா-2024’

தென்னிந்திய கலாச்சார விழா சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான தென்னிந்திய கலாச்சார விழா – நயா 2024, நடைபெற்றது.

தென்னிந்திய கலாச்சார விழா – நயா நிகழ்வை மதிப்பிற்குரிய அறங்காவலர் மற்றும் இணைச் செயலாளர் கல்யாணராமன் மற்றும் சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியின் முதல்வர் ராதிகா துறைத்தலைவர்கள் மற்றும் ஆசிரிய குழுவினருடன் இணைந்து துவக்கி வைத்தனர்.

மேடைப் போட்டிகள் BEST MANAGEMENT TEAM, B-QUIZ, SHORT FILMGROUP DANCE, ADZAP, CONNECTION, 60 SECS TO FAME, IPL AUCTION, SKIT, SOLO INSTRUMENTAL PLAY, மேடையில்லாப் போட்டிகளான PAPER PRESENTATION, MEHANDHI, WEALTH FROM WASTE, FLAMELESS COOKING போன்ற 20-க்கும் மேற்பட்ட போட்டிகள் நடத்தப்பட்டது.

தமிழகம் மற்றும் பிற மாநிலங்களிலிருந்து பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 3000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள் போட்டியாளர்களுக்கு நடுவர்களாகப் பணியாற்றி, வெற்றியாளர்களைத் தோ்வு செய்தனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு அறங்காவலர் மற்றும் இணைச் செயலர் திரு. டி.ஆர்.கல்யாணராமன், மற்றும் கல்லூரி முதல்வர் ராதிகா, ஆகியோர் பாராட்டுக்களையும் ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ்களையும் வழங்கினர்.

ஒட்டுமொத்த அனுபவத்தை மேம்படுத்தும் வகையில், வளாகத்தில் 40-க்கும் மேற்பட்ட வணிகக் கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. பேராசியர் பெர்னார்ட் எட்வர்ட், துணைமுதல்வர், நன்றியுரையாற்றினார். நுண்கலைமன்ற அமைப்பினர் மற்றும் அனைத்து துறை பேராசியர்கள் விழாவிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார். தேசிய கீதத்துடன் விழா நிறைவு பெற்றது.