எஸ்.என்.எஸ். கல்லூரி முன்னாள் மாணவர் அசத்தல்

எஸ்.என்.எஸ். தொழில்நுட்ப கல்லூரியின் முன்னாள் மாணவர் சக்தி பாலசுப்பிரமணி இத்தாலியில் நடைபெற்ற‌‌ லோ ஷோ தேய் சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்றார். நிகழ்வில் மாணவர் ஒரு நிமிடத்தில் 49 முறை உடலால் பின்னோக்கி ஸ்கிப்பிங் செய்து சாதனை படைத்துள்ளார். இது குறித்து, கல்லூரி தொழில்நுட்ப இயக்குநர் நளின் விமல்குமார் கூறுகையில், கல்லூரியில் படிக்கும் போதே இந்த சாதனைக்காக கடுமையான பயிற்சி செய்த இவர், இன்னும் பல சாதனைகள் புரிய கல்லூரி நிர்வாகம் தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்றார்.