இந்திய வளர்ச்சியில் பெண்களின் பங்கு அளப்பரியது பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

இந்திய வளர்ச்சியில் பெண்களின் பங்கு அளப்பரியது என சர்வதேச மகளிர் தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் இன்று சர்வதேச மகளிர் தினம் இன்று அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தை முன்னிட்டு பல முக்கிய அரசியல் தலைவர்கள் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். சமூகத்தின் வளர்ச்சியில் பெண்களின் பங்கு மிகவும் முக்கியமானது என பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரதமர் மோடி மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இந்திய வளர்ச்சியில் பெண்களின் பங்கு அளப்பரியது. பெண்களின் அதிகாரத்திற்காக அரசு தொடர்ந்து பணியாற்றும் என்று குறிப்பிட்டுள்ளார்.