துப்பாக்கி ஏந்திய போலீசார் வளையத்தில் கோவை

கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு தினத்தை முன்னிட்டு துப்பாக்கி ஏந்தி போலீசார் பாதுகாப்பு.

கோயம்புத்தூர் குண்டு வெடிப்பு 26 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நகரில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு. கடந்த 1998 ம் ஆண்டு தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதன் 26 வது ஆண்டு நினைவு தினம் பிப்ரவரி 14ம் தேதி அனுசரிக்க படுகின்றது.

அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமல் தடுக்கும் விதமாக கோவை நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் 1800க்கும் மேற்பட்ட போலீசார் நகரின் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வெடிகுண்டு செயலிழக்க வைக்கும் 8 குழுக்கள் நகரின் முக்கிய இடங்களில் சோதனை.