51+ மாஸ்டர் கேம்ஸ் கூடைப்பந்து போட்டி – தமிழக அணி வெற்றி

கோவாவில் உள்ள மனோகர் பாரிக்கர் உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 50 வயதுக்கு மேற்பட்டோருக்கான தேசிய அளவிள் மாஸ்டர் கேம்ஸ் 2024 கூடைப்பந்து போட்டியில் தமிழ்நாடு மாஸ்டர்ஸ் கூடைப்பந்து  அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது.

போட்டியில் ஹரியானா, கேரளா, மத்திய பிரதேஷ் (இரண்டு அணிகள்), கர்நாடகா  (இரண்டு அணிகள்), ஆந்திர பிரதேஷ் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களிலிருந்து எட்டு அணிகள் பங்கேற்றன.

இதன் இறுதிப் போட்டியில் கர்நாடகா அணியை 41 – 8 என்ற புள்ளி கணக்கில் கோவை பாய்ஸ், கோவை, தமிழ்நாடு கூடைப்பந்து  அணி வெற்றி பெற்றது. இந்நிலையில்  வெற்றி பெற்ற தமிழ்நாடு மாஸ்டர்ஸ் கூடைப்பந்து அணியில் பெரும்பாலான வீரர்கள் கோவையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.