அமிர்தா வேளாண் கல்லூரி மாணவர்களின் தென்னை கண்காட்சி

அமிர்தா வேளாண்மை கல்லூரியில் பயிலும் நான்காம் ஆண்டு மாணவர்கள், ஊரக வேளாண்மை பணி அனுபவத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தென்னை வளர்ப்பு, பூச்சிகள் மற்றும் நோய்கள் மேலாண்மை, ஊட்டச்சத்து மற்றும் மதிப்பு கூட்டுதல் ஆகியவற்றை காண்பிக்கும் விதமாக தென்னை வேளாண் கண்காட்சியை அரசம்பாளையம் நூலகத்தில் நடத்தினர்.

இந்த வேளாண் கண்காட்சி ஆனது அரசம்பாளையம் கிராம தலைவர் திரு.சுந்தரராஜ் மற்றும் தென்னை விவசாய பெருமக்களால் திறந்து வைக்கப்பட்டது. இந்த கண்காட்சியில் தென்னை குறித்த புள்ளி விவரங்கள், பூச்சி மேலாண்மை, நோய் மேலாண்மை, ஊட்டச்சத்து மேலாண்மை மற்றும் மதிப்பு கூட்டுதல் பற்றி அனைவருக்கும் விளங்கும் வகையில் வரைபடங்கள் மற்றும் மாதிரிகளைக் கொண்டு விளக்கப்பட்டது.

வேளாண் கல்லூரி மாணவர்களால் நடத்தப்பட்ட இந்நிகழ்வில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். மேலும் அரசம்பாளையம் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வானது அமிர்தா வேளாண்மை கல்லூரியின் முதல்வர் முனைவர் சுதீஷ் மணலில் மற்றும் குழு வழிகாட்டுனர்கள் மணிவாசகம், மனோன்மணி, பிரான் ஆகியோரின் வழிகாட்டுதலால் நடத்தப்பட்டது.