உலக தர வரிசையில் இந்திய வீரர் நம்பர்-1

இந்திய டென்னிஸ் நட்சத்திர வீரர் ரோகன் போபண்ணா உலக தர பட்டியலில் நம்பர்-1 இடத்தை பிடித்து புதிய வரலாறு படைத்துள்ளார்.

ஆஸ்திரேலிய ஓபன் காலிறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினாவின் மாக்சிமோ கோன்சலஸ் மற்றும் ஆண்ட்ரஸ் மோல்டெனி ஜோடியானது ரோகன் போபண்ணா மற்றும் மேட் எப்டன் ஜோடியை எதிர்கொண்டது.காலிறுதி ஆட்டத்தில் 6-4, 7-6 (7-5) என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளனர். இதனையடுத்து, ஆடவர் இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா மற்றும் மேட் எப்டன் ஜோடி உலகின் நம்பர்-1 இடத்தை பிடித்து அசத்தியது.

43 வயதாகும் போபண்ணா கடந்த 2022 ஆம் ஆண்டின் பிரெஞ்ச் ஓபனில் டென்னிஸ் போட்டியில் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில், தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரையிறுதிக்கு முன்னேறினார். அதே போல் 2013, 2015 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் நடந்த விம்பிள்டன் போட்டியில் தனது சிறப்பான ஆட்டத்தினால் அரையிறுதிக்கு முன்னேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.