ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் உலகளாவிய அறிவு, ஆராய்ச்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியும் சிங்கப்பூரில் உள்ள அகாடமீஸ் ஆஸ்ட்ரலேசியா கல்லூரியும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தமிட்டனர்.

இந்த ஒப்பந்தத்தில் எஸ்.என்.ஆர் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமி நாராயணசாமி  மற்றும் அகாடமீஸ் ஆஸ்ட்ரலேசியாவின் தலைமை செயல் அலுவலர் நிசார் அபுபக்கர் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இது குறித்து லட்சுமி நாராயணசாமி கூறுகையில், இந்த ஒப்பந்தமானது மாணவிகள் மற்றும் பேராசிரியர்களுக்குக் கல்வித்துறையில் உலகளாவிய பங்களிப்புக்கும் ஆராய்ச்சிக்கும் உதவும் என்றும், ஆய்வு மற்றும் மாணவர் நலன் சார்ந்த சான்றிதழ் பயிற்சிகள், கருத்தரங்குகளை மேற்கொள்ளும் வகையில் அமையும் என்று குறிப்பிட்டார்.

அதன் முதல் படியாக ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி முதல்வர் சித்ரா மற்றும் கணினி அறிவியல் துறைத்தலைவர் தாஜுநிஷா ஆகியோர் சிங்கப்பூரில் நடைபெற்ற இரு நிறுவனங்களுக்கும் இடையிலான ஆய்வுக்கான வாய்ப்புகள், கூட்டு முயற்சிகள் மற்றும் செயல் திட்டங்கள் குறித்த ஆலோசனையில் பங்கேற்றனர்.