வி.எல்.பி. கல்லூரியில் “தொழில் முனைவோர்” பயிலரங்கம் 

வி.எல்.பி. ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வணிகவியல் மற்றும் ஆராய்ச்சித் துறை மற்றும் பிடிலைட் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்  ஆகியோர்  இணைந்து “தொழில் முனைவோர்” குறித்த இரண்டு நாள் பயிலரங்கம் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராகக்  கோவை பிடிலைட் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், மவுண்ட் மேஜிக் நிறுவனர் பவித்ரா பங்கேற்றார். அவர் தனது உரையில் தொழில் முனைவோர் திறன்கள் குறித்த ஆளுமைகளையும் துணி ஓவியம், பாட்டில் பெயிண்டிங் போன்றவற்றை மேற்கொள்வதற்கான பயிற்சியையும் வழங்கினார். துணை முதல்வர் வாசுதேவன் மாணவர்களை வளர்ச்சி அடைய ஊக்கமளித்தார்.