இந்துஸ்தான் ஆசிரியர்கள் உருவாக்கிய அயோத்தி ராமர் கோவில் வடிவம்

உத்தரப் பிரதேசத்தில் அமைந்துள்ள அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முப்பரிமாண அச்சிடும் இயந்திரத்தின் மூலம் அக்கோவிலின் மாதிரி வடிவத்தை உருவாக்கியுள்ளனர் இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி ஆசரியர்கள்.

இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் அகில இந்திய தொழில்நுட்ப இயக்குனரகத்தின் “ஐடியா-(IDEA)” ஆய்வகத்தில் அயோத்தி ராமர் கோவிலின் மாதிரி வடிவத்தை உருவாக்கியுள்ளனர்.

கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் கொங்குமாமணி திருமதி சரசுவதி மற்றும் இணை செயலாளர் முனைவர் பிரியா அவர்கள் ராமர் கோவிலின் மாதிரி வடிவத்தை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கியதில் நாங்கள் பெருமை கொள்கிறோம் என்று கூறினார்கள். கல்லூரியின் முதல்வர் ஜெயா அவர்கள் இதை உருவாக்கிய ஆசிரியர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் பேராசிரியர் சபரிநாதன் அவர்களை பாராட்டியதுடன் கல்லூரிக்கு சிறப்பு விருந்தினராக வரும் அனைவருக்கும் ராமர் கோவிலின் மாதிரி வடிவம் பரிசாக வழங்கப்பட உள்ளது என்று கூறினார்.

முதன்மை அலுவலர் கருணாகரன், டீன் மகுடேஸ்வரன் அவர்கள் இதை உருவாக்கிய ஆசிரியர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.