டிஜிட்டல் பரிவர்த்தனையில் இந்தியா முன்னணி

இந்தியாவில் பணமதிப்பிழப்பு கொள்கை நாட்டின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்கத் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதே சமயத்தில், இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிமாற்ற சேவைகள் அசுர வேகத்தில் வளர்ச்சியை எட்டியுள்ளது.

2021 ஆம் ஆண்டில் டிஜிட்டல் பணப்பரிமாற்ற சேவையில், அதன் வளர்ச்சி 72 சதவீதம் ஆக இருந்தது, ஜூன் 2021 இல் 5.6 டிரில்லியன் மதிப்புள்ள 1.49 பில்லியன் பரிவர்த்தனைகள் செயலாக்கப்பட்டன. மேலும், 2022 ஆண்டின் இறுதியில், என்.பி.சி.ஐ -இன் படி, யுபிஐ -யின் மொத்த பரிவர்த்தனை மதிப்பு 125.95 டிரில்லியனாக இருந்தது. இதில், சுவாரஸ்ய தகவல் என்னவென்றால் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 86 சதவீகிதம் யுபிஐ பரிவர்த்தனையில் நடந்தவை. 2023 ஆண்டின் இறுதியில், யுபிஐ-யின் மொத்த பரிவர்த்தனை அளவு 83.75 பில்லியனாக உள்ளது.

இந்த புள்ளிவிவரங்கள் இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு வசதியான மற்றும் பாதுகாப்பான தளமாக யுபிஐ இருப்பதை குறிப்பிடுகிறது. இந்நிலையில், சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் டிஜிட்டல் பரிவர்த்தனையில் இந்தியா முன்னணியில் இருப்பதாகவும், மேலும் உலக அளவில் டிஜிட்டல் கட்டண முறையில் இந்தியாவின் யுபிஐ பணப்பரிவர்த்தனை முன்னணியில் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அதில், இந்தியாவில் 30 கோடி தனி நபர்களும், 5 கோடிக்கும் அதிகமான வணிகர்களும் யுபிஐ பரிவர்த்தனையைப் பயன்படுத்துவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.