இரத்தினம் கல்லூரியின் 20-வது பட்டமளிப்பு விழா

இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 20-வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

பட்டமளிப்பு விழாவின் சிறப்பு விருந்தினராக மத்திய வெளி உறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் கலந்து கொண்டு, `உலகத்தரத்தில் மாணவர்களுக்கு மொழித்திறன் அவசியம் தேவைப்படுகிறது’ என்றும் `கல்வி கற்றலில் முக்கியத்துவம் மற்றும் அவசியம்’ வேண்டும் என்பதனைக் கூறினார். இந்தியாவின் தகவல் தொடர்பு சார்ந்தவைகள் மிகப்பெரிய அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது, இந்தியாவின் வளர்ச்சி நிலையில் சிறப்புற அமைந்துள்ளது என்று பேசிய அவர், `இந்தியா உலகத்தரத்தில் முன்னனியில் விளங்கிறது என்றும் தொழில் முனைவோர் உருவாக்குவதற்கும், அதனை அறிந்து கொள்ளுவதற்கும், அதன் பயன்கள் பற்றியும் விளக்கிக் கூறினார்.

மேலும், `இந்தியாவில் இளைஞர்கள் தொழில் தொடங்குவதற்கு வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளது. இந்தியாவின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் தமிழ்நாட்டின் பாரம்பரியம் சிறந்தவையாக காணப்படுகிறது. உலகளவில் இருக்கும் திருகுறளின் மேன்மையின் தனித்தன்மையை’ விளக்கினார். கோயமுத்தூர் வளர்ச்சி நிலைகளையும், அதன் சிறப்புகளையும் மாணவர்களுக்கு பயனுள்ள தகவல்களைக் கூறி சிறப்புரையாற்றினார்.

இப்பட்டமளிப்பு விழாவில் 750-க்கு மேற்பட்ட இளங்கலையில் 2021-22 ஆம் ஆண்டு தேர்ச்சிப்பெற்ற மாணவ, மாணவியர்களும் மற்றும் 150-ற்கும் மேற்பட்ட முதுகலையில் 2021-2022 ஆம் ஆண்டு தேர்ச்சிப் பெற்ற மாணவ, மாணவியர்களும் கலந்து கொண்டு பட்டம் பெற்றார்கள்.

மேலும், விழாவில் இரத்தினம் கல்விக் குழுமத் தலைவர் மதன் ஆ.செந்தில் விழாவினை தலைமையேற்றுத் தலைமை உரையாற்றினார். இரத்தினம் கல்விக் குழும இயக்குநர் ஷிமா செந்தில், கல்லூரிச் செயலாளர் மற்றும் முதன்மை நிர்வாக அதிகாரியுமான மாணிக்கம், துணைத்தலைவர் நாகராஜ், கல்லூரி முதல்வர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் வரவேற்புரை வழங்கினர்.