பெண்கள் அறிந்திருக்க வேண்டிய சட்ட உரிமைகள்

உரிமை என்பது உறுதி செய்யப்பட்ட சுதந்திரமாகும். ஆனால் பெரும்பாலானோருக்கு என்னென்ன உரிமை பெற்றிருக்கிறார்கள் என்பது கூட தெரிவதில்லை. அதிலும் பெரும்பாலான பெண்கள் அவர்களுடைய உரிமையினை நிலைநாட்டுவதில்லை.

சம ஊதியத்திற்கான உரிமை

ஊதிய சட்டத்தின்படி, வேலையில் சம ஊதியம் பெறப் பெண்களுக்கு உரிமை உண்டு. சம்பளம், ஊதியம் ஆகியவற்றின் அடிப்படையில் பாலின அடிப்படையில் பாகுபாடு காட்டுவது தடை செய்யப்பட்டுள்ளது.

பணியிட துன்புறுத்தலுக்கு எதிரான உரிமை

பணியிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் சட்டம், தங்கள் பணியிடத்தில் ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக புகார் அளிக்க உரிமை வழங்குகிறது.

குடும்ப வன்முறைக்கு எதிரான உரிமை

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 498-வது பிரிவு, வார்த்தைகளால் துன்புறுத்தல், பொருளாதாரம் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் உள்ளிட்ட குடும்ப வன்முறைகளிலிருந்து பெண்களைப் இந்த சட்டம் பாதுகாக்கிறது.

இலவச சட்ட உதவிக்கான உரிமை

பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சட்ட சேவைகள், இந்த சட்டத்தின் கீழ் இலவச சட்ட உதவி பெற உரிமை உண்டு.

இரவில் கைது செய்யக்கூடாது என்பது உரிமை

விதிவிலக்கான சூழ்நிலையில் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட்டின் உத்தரவு இல்லாமல், சூரிய அஸ்தமனத்திற்குப் பின் மற்றும் சூரிய உதயத்திற்கு முன் பெண்களை கைது செய்ய முடியாது.