‘சுவிட்ச் ஆப்’ செய்யக் கூடாது’ பொறியாளர்களுக்கு உத்தரவு…

மின் தடை உள்ளிட்ட மின்சார புகார்களை, 94987 94987 என்ற எண்ணில், மின்னகம் நுகர்வோர் சேவை மையம் மட்டுமின்றி, பொறியாளர்களின் மொபைல் போன் எண்ணிலும், பொது மக்கள் தெரிவிக்கலாம். சிலர், மின் வாரியம் வழங்கியுள்ள மொபைல் எண் உள்ள போனை, ‘சுவிட்ச் ஆப்’ செய்து விடுகின்றனர்.

தற்போது, சென்னை உட்பட பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. எனவே, மழையின் போது, பொது மக்கள் அளிக்கும் புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க, நிர்வாகம் தரப்பில் இருந்து வழங்கப்பட்ட மொபைல் போன் எண்ணை, 24 மணி நேரமும் இயக்கத்தில் வைக்கவும், ‘சுவிட்ச் ஆப்’ செய்யக்கூடாது என்றும் பொறியாளர்களுக்கு, மின் வாரியம் உத்தரவிட்டு உள்ளது….