அறிவா? சாமர்த்தியமா?

Knowledge and intelligence இது ரெண்டுக்கும் வித்தியாசம் தெரியுமா? தெரிஞ்சுக்கணும்னா இந்த கதையோட முடிவில் தெரிஞ்சுக்கலாம் !

உலகப் புகழ்பெற்ற Scientist ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் இவரை தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது..அவர் எங்கு போனாலும் அவருடன் டிரைவரும் கூடவே தான் வருவாரு..

ஒரு நாள் ஒரு காலேஜ் presentation இருந்தது. அப்போது அவர் கார்ல போயிட்டு இருக்கும்போது அவரோட  டிரைவர் ஐன்ஸ்டீன் கிட்ட கூறியது : சார் உங்களோட தியரி ஆப் ரிலேட்டிவிட்டி ரொம்ப ஈஸியா இருக்கு நான் கூட ப்ரெசென்ட்டேஷன் பண்ணிடுவேன் … ஏன்னா நீங்க சொல்ற ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு மனப்பாடம்,. ஏனா நானே அது அத்தனை தடவை கேட்டு இருக்கேன் அப்படின்னு சொல்லி இருக்கார்.

நார்மலா இந்த மாதிரி யாராவது பேசினால் நமக்கு எரிச்சல் தான் வரும். ஆனால் இவர் என்ன நினைத்திருந்தார்னா நாம் சொல்லி கொடுக்கும் தியரி ஒரு டிரைவருக்கு புரியற அளவுக்கு அவ்ளோ ஈஸியா சொல்லிக் கொடுத்து இருக்கோம்னு நினைத்து சந்தோஷப்பட்டு இருந்தார் .

கொஞ்ச தூரம் போனதுக்கு அப்புறம் ஐன்ஸ்டீன் டிரைவர் கிட்ட இன்னிக்கு நீ presentation பண்ணு.. நான் வேடிக்கை பார்க்கிறேன்னு சொன்னாரு ..சற்றும் யோசிக்காமல் டிரைவரும் சரினு சொல்லிட்டாரு.

அந்த காலத்துல எல்லாம் இப்ப இருக்கிற மாதிரி டெக்னாலஜி இல்ல இப்ப ஒருத்தர பத்தி நாம தெரிஞ்சுக்கணும்னா ஒன்னு உங்களுடைய பேஸ்புக் இன்ஸ்டாகிராம் போய் பார்த்து அவங்க யாருன்னு தெரிஞ்சுக்கிறோம் .. ஆனா அந்த காலத்துல நான் தான் இவரு அப்படின்னு யாராவது சொன்னாங்கன்னா அங்கே இருக்குறவங்க நம்பித்தான் ஆகணும்.. அந்த அளவுக்கு முகங்கள் பிரபலமாகாத காலமது.

காலேஜ் பக்கத்தில் வந்த உடனே 2 பேரும் அவங்க தங்களோட டிரஸ் மாத்திட்டாங்க காலேஜ் உள்ள வந்த உடனே டிரைவர் டிப்டாப்பா ஸ்டேஜ் ஏறி பேசத் தொடங்கிட்டாரு. நம்ம ஐன்ஸ்டீன் கடைசி பெஞ்சில உக்காந்து கார் டிரைவர் எப்படித்தான் presentation பண்ணுறாருனு பார்த்துட்டு இருந்தார் . ஐன்ஸ்டீனுக்கு ரொம்ப ஆச்சரியம் என்னனா  அவரோட டிரைவர் அவ்வளவு அழகா சொல்லிகுடுத்துட்டு இருந்தார் .

இந்த ஆச்சரியத்தை விட பெரிய ஆச்சரியம் ஐன்ஸ்டீனுக்கு காத்துட்டு இருந்தது. டிரைவர் பிரசன்டேஷன் முடிச்சதுக்கு அப்புறம் கேள்விக்கு பதில் கேட்க ஆரம்பிச்சாங்க.. ஆல்மோஸ்ட் எல்லா கேள்விக்கும் ஐன்ஸ்டின் கிட்ட கேட்ட கேள்வி மாதிரிதான் இருந்தது. டிரைவரும் அவர் சொன்ன பதிலை நியாபகம் வச்சு அவரும் அங்கே பதிலளிச்சிட்டாரு ..

எல்லாம் சரியா இருந்த நேரத்துல அங்கே இருந்த ஒருத்தர் இதுவரைக்கும் யாருமே கேட்காத ஒரு கேள்வியை அந்த டிரைவரை பார்த்து கேட்டார்.

டிரைவருக்கு என்ன பதில் சொல்றதுன்னே தெரியல எனக்கு இதுக்கு ஆன்சர் தெரியல அப்படின்னு சொன்னா ஐன்ஸ்டீன் பேரு கெட்டுப் போயிடும் ….நான் ஐன்ஸ்டீன் இல்ல அவரு டிரைவர் தான் அப்படின்னு சொன்னா சுத்தமா மொத்தமும் கெட்டுப் போயிடும் ..

அந்த டிரைவர் ஸ்மார்ட்டா என்ன பண்ணாருனா  கேள்வி கேட்டவரை பார்த்து நீங்க கேட்ட கேள்வி ரொம்ப ரொம்ப ஈஸியான கேள்வி? இதுக்கு நான் வேண்டாம் என் டிரைவரே பதில் சொல்லிருவார் னு சொல்லி சாமர்த்தியம செயல்பட்டார்.

இதை பார்த்த ஐன்ஸ்டீன் டிரைவர் எவ்வளவு ஸ்மார்ட்டா பேஸ் பண்ணாரு நினைத்து சந்தோஷம் அடைந்தார்.

ஒவ்வொரு விஷயம் செய்யப் போகும் போதும் நாம கத்துகிட்ட பல விஷயங்களை யோசிப்போம் ஆனால் செய்ய ஆரம்பிக்கும் போது அங்கு அந்த இடத்துக்கு என்ன தேவையோ அதை நாம் யோசித்து பார்த்தால் அதுதான் இண்டலிஜென்ஸ்.

அந்த நேரத்துக்கு எது தேவையோ எது சரியோ அதையே செய்வோம் உன் வாழ்க்கை உன் கையில்…..