உறவினர் என்பதைத் தாண்டி..,எந்த வரவு செலவும் கிடையாது-மீனா ஜெயக்குமார் விளக்கம்

கோவை ராமநாதபுரம் பார்சன் குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும், அமைச்சர் எ.வ. வேலுவின் உறவினர் மீனா ஜெயக்குமார் இல்லத்தில் சமீபத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மீனா ஜெயக்குமார், “வருமான வரித்துறை நடத்திய சோதனையின் நோக்கம் என்ன? என்பது மக்களுக்கு தெரியும். அமைச்சர் எ.வ. வேலுக்குச் சம்பந்தமான பத்திரங்கள், சொத்துக்கள் மற்றும் அவருக்குச் சம்மந்தப்பட்ட ஆவணங்கள் ஏதேனும் எங்கள் பெயரில் இருக்கிறதா என்று விசாரித்தனர் . மேலும், ஆவணங்கள் தொடர்பான குறிப்புகளையும் எடுத்துக் கொண்டனர். உறவினர் என்பதைத் தாண்டி, தொழில் ரீதியாகவும், பண வரவு செலவு மூலம் அவர்களிடம் எந்த வரவு செலவும் கிடையாது. இந்த சோதனையால் மன உளைச்சல் தான் ஏற்பட்டது என்றவரிடம்.,

தேர்தல் பணியை முடக்கும் நோக்கில் சோதனைகள் நடைபெறுகிறதா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்தவர், “குறிப்பிட்டு இதுதான் காரணம் என்று சொல்லத் தெரியவில்லை. ஆனால், நடைபெற்ற சோதனையால் தேர்தல் பணிகள் சற்று தாமதம் ஆகிறது என்றார்.