இந்தியாவின் முதல் திட்டமிடப்பட்ட நகரம் எது தெரியுமா?

இந்தியாவின் சிறந்த திட்டமிடப்பட்ட நகரங்களில் ஒன்றை 300 ஆண்டுகளுக்கு முன்பு ராஜபுத்திர இளவரசர் கட்டினார் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.

யுனெஸ்கோவின் தகவல்களின் படி, 1727 இல் இந்தியாவின் முதல் திட்டமிடப்பட்ட நகரம் ஜெய்ப்பூர். அதற்குப் பின்னால் இருந்த மூளை ராஜபுத்திர ‘வானியல் இளவரசர்’ இரண்டாம் சவாய் ஜெய் சிங்.

City Palace, Jaipur, Jaipur - Book Tickets & Tours | GetYourGuide

1700-களின் முற்பகுதி வரை, அம்பர் கச்வாஹா ராஜபுத்திர மன்னர்களின் தலைநகராக விளங்கியது. இருப்பினும், வறட்சி மற்றும் பஞ்சம் காரணமாக, அம்பர் தலைநகராக நீடிக்க முடியாத நிலையில் இருந்தது.

எனவே இரண்டாம் மஹாராஜா சவாய் ஜெய் சிங் ராஜ்புத் ராஜ்ஜியத்தின் தலைநகரை மாற்ற சாத்தியமான நகரங்களைத் தேடத் தொடங்கினார். ஜெய் சிங் ஒரு சாதாரண மன்னர் மட்டுமல்ல, ஒரு கணிதவியலாளர், கட்டிடக் கலைஞர் மற்றும் வானியலாளர் ஆவார். அவர் தனது ராஜ்யத்தைப் பாதுகாக்க மூலோபாய ரீதியாக முக்கியமான ஒரு இடத்தைத் தேர்ந்தெடுக்க விரும்பினார்.

Jaipur | Pink City | India's Golden Triangle | andBeyond

அந்த வகையில் அவர் ஜெய்ப்பூரைத் தேர்ந்தெடுத்தார். சமவெளி நிலப்பரப்பில் அமைந்திருந்த ஜெய்ப்பூர் மலைகளால் சூழப்பட்டிருந்ததால் அந்த நேரத்தில் வழக்கத்திற்கு மாறான தேர்வாக அது இருந்தது. ஆனால் ஜெய்ப்பூர் நகரத்தின் சிறப்பியல்புகள் மன்னரின் பார்வைக்கு ஒத்துப்போனது.

அதனால், ஜெய்ப்பூர் வரைபடத்தை வடிவமைக்க விரும்பிய மன்னர், அதற்காக வங்காளத்தைச் சேர்ந்த கட்டிடக் கலைஞர் வித்யாதர் பட்டாச்சார்யாவை தலைமை தணிக்கையாளராக நியமித்து ஜெய்ப்பூர் வரைபடத்தை வடிவமைத்தனர். அந்த வகையில், 1727 இல் நிறுவப்பட்ட ஜெய்ப்பூர் இந்தியாவின் முதல் திட்டமிடப்பட்ட நகரமாக மாறியது.

ஜெய்ப்பூரின் மிகச்சிறந்த அம்சம் அதன் நகரத் திட்டமாகவே உள்ளது, இது உலகம் முழுவதிலுமிருந்து சவாய் ஜெய் சிங்கால் பெறப்பட்ட பல நகரத் திட்டங்களைப் பற்றிய முழுமையான பகுப்பாய்வுக்குப் பிறகு வந்ததாகக் கூறப்படுகிறது.