சிம்ஸ் கல்லூரியில் பட்டமளிப்பு விழா!

சக்தி தகவல் தொடர்பியல் மேலாண்மை கல்லூரியின் 10வது பட்டமளிப்பு விழா ஞாற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வினை கல்லூரி செயலாளர் பாலசுப்பிரமணியம் துவக்கி வைத்தார். கல்லூரி இயக்குநர் பாலுசாமி ஆண்டறிக்கை வாசித்தார்.

விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வேல்ராஜ் அண்ணா பல்கலை கழக துணைவேந்தர், சென்னை கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில்; இன்றிய தினம் பட்டம் பெரும் அனைத்து மாணவர்களுக்கும் மிக சிறந்த நாள். ஒரு நல்ல நிர்வாகம் என்பது திட்டமிட்ட வழிகாட்டுதலால் நடத்தப்படுவது என கூறி, திட்டமிடுதலின் முக்கியத்துவம் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். மேலும், தொழில்நுட்பம், விவசாயம், சுகாதார துறை ஆகியவற்றில் தேவைக்கு ஏற்ற புதுமையான கண்டுபிடிப்புகளை செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி மேற்கொள்ள வேண்டும். இதுவே நாட்டின் நிலையான வளர்ச்சியாகும்., என்றார்.

இதில் அண்ணா பல்கலைகழக 2020 மேலாண்மை தேர்வுகளில், 8வது இடத்தை பிடித்துள்ள ஜி.காவ்யாஸ்ரீக்கு பதக்கமும், மற்ற 67மாணவர்கள் பட்டம் பெற்றனர்.

நிகழ்வில் என்.ஜி.எம் கல்லூரி முதல்வர் முத்துக்குமாரன், கல்லூரி மேலாளர் ரகுநாதன், பி.சுப்பிரமணியன் முன்னால் ஆலோசகர் சிம்ஸ், துறை தலைவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.