கங்கா மருத்துவமனையில் செராமிக் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை

இந்தியாவிலேயே முதன்முறையாக, மெட்டல் பாகங்கள் இல்லாமல் முழுமையாக செராமிக்கை பயன்படுத்தி மொத்த முழங்கால் மாற்று அறுவை சிகிச்சையைச் செய்து  கோவை கங்கா மருத்துவமனை சாதனை படைத்துள்ளது. இந்த அறுவை சிகிச்சையைப் பேராசிரியர் டாக்டர் ராஜசேகரன் மற்றும் அவரது குழுவினர் மேற்கொண்டனர்.

பிபிகே–எஸ் ஒருங்கிணைந்த செராமிக் முழங்கால் அமைப்பு மெட்டல் இல்லாத செராமிக் முழங்கால் மாற்று என்பது எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள், பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளைக் கொண்ட ஆராய்ச்சி குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்ட புதிய மருத்துவ தொழில்நுட்ப முறையாகும்.  இது மூட்டுகளில் மென்மையான உணர்திறன், திசு மேலாண்மை மற்றும் மூட்டுகளின் சிறந்த கண்காணிப்பு ஆகியவற்றை வழங்குகிறது. இதன் காரணமாகச் செயற்கை முழங்காலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.

பிபிகே- எஸ் ஒருங்கிணைப்பு செராமிக் முழங்கால் அமைப்பு முற்றிலும் மெட்டல் இல்லாத சிகிச்சையை வழங்கும் உலகின் முதல் சிகிச்சை முறையாகும். இந்த ஹைபோஅலர்கெனிக் செராமிக் முழங்கால் மாற்றுச் சிகிச்சை முறையானது திசுக்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத வகையிலும், நச்சுத்தன்மையற்ற, ஹைப அலர்கெனி மற்றும் உலோக ஒவ்வாமை போன்றவை ஏற்படாமல நோயாளிகளைப் பாதுகாப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கங்கா மருத்துவமனையின் எலும்பியல் அறுவை சிகிச்சைத் துறைத் தலைவர் எஸ் ராஜசேகரன் மற்றும் ஜெர்மனியின் பேராசிரியர் டாக்டர் மைக்கேல் வாக்னர் ஆகியோர் அடங்கிய அறுவை சிகிச்சைக் குழுவால் இந்தியாவில் முதன்முறையாகக் கங்கா மருத்துவமனையில் செராமிக் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

உலோக அயனி வெளியீட்டின் அடிப்படையில் இது  மிகவும் பாதுகாப்பானது. உயர் நோயெதிர்ப்பு சகிப்புத்தன்மை, நச்சுத்தன்மை ஆபத்து இல்லை, திசுக்களுக்கு ஏற்றது. பாலிஎதிலீன் நீர் கணிசமாகக் குறைக்கப்படுகிறது. செராமிக் மேற்பரப்புகளில் குறைவான உயிர்ப்படலம் உருவாக்கம் உள்ளிட்ட பல்வேறு  மருத்துவ நன்மைகளைக் கொண்டுள்ளது.

மூட்டு அறுவை சிகிச்சைப் பிரிவு

கங்கா மருத்துவமனையின் மூட்டு அறுவை சிகிச்சைப் பிரிவு, ஒவ்வொரு ஆண்டும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகளைச் செய்து வரும் இந்திய அளவில் பிரபல மருத்துவமனைகளில் ஒன்றாக உள்ளது. மேலும், மூட்டு மாற்றுச் சிகிச்சைத் துறையில் முக்கியமான கண்டுபிடிப்புகளை நாட்டிற்கு அறிமுகப்படுத்தியதில் இம்மருத்துவமனை முதல் இடத்தைப் பிடித்துள்ளது. சமீபத்தில் நாட்டில் துல்லியமான மற்றும் மொத்த முழங்கால் மாற்றுச் சிகிச்சைக்கு நான்காவது தலைமுறை ரோபோடிக் சிகிச்சை முறையை அறிமுகம் செய்த முதல் மருத்துவமனை இது என்பது குறிப்பிடத்தக்கது.