மன அழுத்தத்தை போக்க உதவும் 5 உணவுகள்

பெரும்பாலான மக்கள் அதிகம் பேசும் வார்த்தை ஸ்ட்ரெஸ் எனும் மன அழுத்தம். மன அழுத்தம் என்பது உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்கும் ஒரு பெரும் உணர்வு. சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், இது உடல் பருமன், இதய நோய் மற்றும் நீரிழிவு போன்ற வாழ்க்கை முறை நோய்களுக்கும் வழிவகுக்கும்.

இந்த புரியாத மன அழுத்தத்தை சரிசெய்து கொள்ள உங்கள் உணவில் எளிதில் சேர்த்துக் கொள்ளக்கூடிய தினசரி உணவுகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1.டார்க் சாக்லேட்

மன அழுத்தத்தை வெல்ல சிறந்த உணவுகளில் ஒன்று டார்க் சாக்லேட் ஆகும், இது நம் மனதில் இரசாயன மற்றும் உணர்ச்சிகரமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது ஆண்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், உடலில் மன அழுத்த ஹார்மோன் அளவைக் குறைக்க உதவுகிறது.

2.சூடான பால்

வெதுவெதுப்பான பாலில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி நிறைந்துள்ளது. இது மன இறுக்கம் ஏற்படும்  போது தசைகளைத் தளர்த்த உதவுகிறது.  இரவு படுக்கைக்குச் செல்வதற்கு முன் சூடான பால் சேர்த்துக்கொள்ள நிபுணர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. சூடான மன அழுத்தத்தைப் போக்க உதவும் என்பது பலருக்குத் தெரியாது.

3.அதிக நார்ச்சத்து நிறைந்த உணவுகள்

நார்ச்சத்து நிறைந்த உணவுகள் மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வைக் குறைக்க உதவுகிறது. உங்கள் அன்றாட உணவில் அதிக நார்ச்சத்து நிறைந்த பழங்கள், கீரை வகைகள், காய்கறிகள், பருப்பு வகைகளை தேர்வு செய்து சாப்பிடுங்கள். மன அழுத்தம் குறைய சிறந்த காரணிகள் என்கிறார்கள் நிபுணர்கள்.

4.நட்ஸ் வகைகள்

பாதாம், ஆளி விதைகள், பிஸ்தா, சூரியகாந்தி விதைகள் மற்றும் அக்ரூட் பருப்புகள் போன்ற நட்ஸ் வகைகளை மிதமான அளவில்  உட்கொள்ளும் போது மன அழுத்தத்தை குறைக்கும் சிற்றுண்டியாக செயல்படுகிறது.

5.முழு பதப்படுத்தப்படாத தானியங்கள்

ஆரோக்கியமான கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த பதப்படுத்தப்படாத தானியங்களை உணவில் சேர்த்துக்  கொள்ளுங்கள். இது உங்களின் மனநல ஆரோக்கியத்திற்கு சிறந்த ஊட்டச்சத்துக்காகவும், போதுமான நார்ச்சத்து உட்கொள்வதற்காகவும் உதவுகிறது. மேலும், ஜீரணிக்க அதிக நேரம் எடுத்துக் கொள்வதால் ரத்தத்தில் சர்க்கரை அளவை சமன் செய்கிறது.