தகவல்தொடர்புக்கு ஆங்கிலம் கற்பது மிக அவசியம் – மகாலிங்கம் கல்லூரி ஆண்டு விழாவில் சிவராமகிருஷ்ணன் செந்தட்டி.

டாக்டர் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 26வது ஆண்டு விழா நடைபெற்றது.  எம்.சி.இ.டி.யின் முதல்வர் கோவிந்தசாமி ஆண்டு அறிக்கையை வழங்கினார்.

சிறப்பு விருந்தினராகச் சென்னை நியூ மார்க்கெட் டெவலெப்மென்ட் அண்ட் குளோல் ஹெட் – சிஐஎஸ் எல்டிஐ மைன்ட் ட்ரீ லிமிடெட்ன் நிர்வாக துணைத் தலைவர் சிவராமகிருஷ்ணன் செந்தட்டி  பங்கேற்றார். அவர் பேசுகையில், தொழில்நுட்பம் பற்றிய அறிவைப் பெறுவதற்கு சமூக ஊடக தளங்களை ஒரு கருவியாகப் பயன்படுத்துமாறு மாணவர்களுக்கு வலியுறுத்தினார். உங்கள் வலிமையை அறிந்து கொண்டு, மேலும் அதை வலுப்படுத்த, தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் அப்போது தான் வெற்றி அடைவீர்கள் என்று கூறினார். அனைவரும் தொழில்நுட்பக் கருவிகளைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.

மேலும் மாணவர்களின் ஆங்கிலத் திறன்களின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தியதோடு, புரிந்து கொள்வதற்கும் பயனுள்ள தகவல்தொடர்புக்கும் முக்கியமாகக் கேட்கும் திறனை வளர்த்துக்கொள்வது இன்றைய சூழலில் அவசியமானது என்று கூறினார்.

கெளரவ விருந்தினராகப் பெங்களூரூ ஃபிடிலிட்டி இந்தியாவின் இயக்குநர் (கட்டிடக்கலை பகுப்பாய்வு) ஆராய்ச்சி & தரவு, சுமதி சுப்ரமணியன், முன்னாள் மாணவி (1999-2003) கலந்து கொண்டார். வெற்றி வாழ்க்கைக்கான இலக்குகளை நிர்ணயிக்கும் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார். மாணவர்கள் காத்திருக்காமல் தங்கள் லட்சியங்களை விரைவில் தொடங்க வேண்டும் என்று முன்னெடுத்தார். தொடர் கற்றலின் முக்கியத்தை எடுத்துரைத்து மேலும் மாணவர்கள் மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க  வேண்டும் என்று அறிவுரை கூறினார்.

மாணவர் சேவை மன்றத்தின் தலைவர் செல்வன் எஸ்.எஸ் பிரணவ குமார் அவர்களுக்கு “அருட்செல்வர் விருது” வழங்கப்பட்டது. ஒவ்வொரு துறையைச் சார்ந்த இளங்கலை பயின்ற 9 சிறந்த மாணவர்களுக்கு தலா ரூ.10,000/- மதிப்பிலான ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 1 முதுகலை மாணவர் தலா ரூ.5000/- ரொக்கப் பரிசு, சான்றிதழ் மற்றும் விருது வழங்கப்பட்டது.

சாதனையாளர் விருது, சிறந்த என்சிசி கேட்ட விருது, என்எஸ்எஸ் சிறந்த சேவைக்கான விருது மற்றும் சிறந்த நூலகப் பயனாளர்கள் விருது போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டன.

இதில், என்.ஐ.ஏ கல்வி நிறுவனங்களின் செயலர் இராமசாமி,  என்.ஐ.ஏ கல்வி நிறுவனங்களின் முதன்மை மனித வள அதிகாரி சுப்ரமணியன், டீன்கள் செந்தில்குமார், ராமகிருஷ்ணன், நாகராஜன், கல்லூரிகளின் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும்  மாணவ  மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.