வேதியியல் நோபல் பரிசு; 3 பேருக்கு பகிர்ந்து அளிப்பு!

இந்த ஆண்டிற்கான வேதியியல் துறைக்கான நோபல் பரிசு 3 பேருக்குப் பகிர்ந்து அளிக்கப்படுகிறது.

மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், இலக்கியம், அமைதி, வேதியியல் உள்ளிட்ட ஆறு துறைகளில் சிறந்த கண்டுபிடிப்புகள், சேவைகள் நிகழ்த்தி சாதனை படைத்தவர்களுக்கு  உலகின் உயரிய விருதான நோபல் விருது வழங்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில், 2023 ஆண்டிற்கான நோபல் பரிசு அறிவிப்பு ஸ்வீடன் தலைநகர் ஸ்டால்ஹோமில் நேற்று முன்தினம்  முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், மருத்துவம், இயற்பியல் துறையில் சாதித்தவர்களுக்கான நோபல் பரிசு அறிவிப்புகள் அண்மையில் வெளியாகின.

இந்நிலையில், வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. குவாண்டம் தொடர்பான ஆராய்ச்சியில் சிறப்பாகச் செயலாற்றிய  அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள், மூங்கி பவண்டி, லூயிஸ் பூருஸ், அலெக்சி எகிமூவ் ஆகியோருக்கு இந்த ஆண்டிற்கான நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்படுகிறது.