விக்ரம் ரசிகர்களுக்கு ட்ரீட் வந்துவிட்டது தங்கலான் அப்டேட்

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் திரைப்படம் சிறப்பான கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. இது சுதந்திர போராட்ட காலத்தையொட்டிய கதைக்களத்தில் கேஜிஎப் மக்களின் வாழ்க்கையை சொல்லும் படமாக இருக்கும்.

விக்ரம் நடிப்பில் கோப்ரா, பொன்னியின் செல்வன் படங்களின் தொடர்ச்சியாக அடுத்த மாதம் நீண்ட நாட்கள் கிடப்பில் போடப்பட்டிருந்த துருவ நட்சத்திரம் படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில் தங்கலான் திரைப்படம் அடுத்த வருடம் ஜனவரி 26 யில் ரீலீஸ் ஆக உள்ளது எனவும்  படத்திற்கான டீஸர் வரும் நவம்பர் 1 யில் வெளியாக உள்ளது எனவும் படக்குழு அறிவித்துள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.