பாம்புக்கு சி.பி.ஆர் சிகிச்சை செய்த காவலர்

விஷமற்ற பாம்பு ஒன்றுக்கு காவலர் ஒருவர் சி.பி.ஆர் முதலுதவி சிகிச்சை செய்த சம்பவம் மத்தியப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம், நர்மதாபுரத்தில் உள்ள குடியிருப்பு காலணியின் பைப்லைனுக்குள் விஷமற்ற பாம்பு ஒன்று புகுந்திருக்கிறது. அந்த பாம்பை வெளியே எடுக்க முயன்ற அப்பகுதி மக்கள் அதனை வெளியே எடுக்க முடியாமல் பூச்சிக்கொல்லி மருந்தைத் தண்ணீரில் கலந்து குழாயில் ஊற்றியிருக்கின்றனர். அதன் பிறகு, சில நிமிடங்களில் வெளியே வந்த பாம்பு திடீரென மயங்கிவிட்டது. என்ன செய்வது என்று தெரியாமல் காவல் துறைக்குத் தகவல் தெரிவித்திருக்கின்றனர்.

இதனையடுத்து அங்கு வந்த அதுல் சர்மா என்ற காவலர் பாம்பை பரிசோதித்த பின்னர் அதற்கு சி.பி.ஆர் முதலுதவி சிகிச்சை செய்திருக்கிறார். பாம்பின் வாயில் ஊதி சி.பி.ஆர் சிகிச்சை செய்தபிறகு, சில நிமிடங்களில் பாம்பு சுயநினைவடைந்து ஊர்ந்து செல்லத்தொடங்கியது. பாம்பிற்கு அதுல் சர்மா செய்யும் முதலுதவி வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகியுள்ளது. இணையவாசிகள் பலரும் காவலரின் இந்த செயலுக்குப் பாராட்டி வருகின்றனர். அதே சமயம்  இதுபோல் செயல்படுவது உயிருக்கே ஆபத்தை விளைவிக்கலாம் என எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.

விடியோவை காண இங்கே கிளிக் செய்யவும்.,

https://twitter.com/VoiceOfAxom/status/1717460075651256704