வலுப்பெறும் ‘வடகிழக்கு பருவமழை’ கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வலுவடையத் தொடங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, அரபிக்கடல், வங்கக்கடலில் உருவான புயல்களால் வட கிழக்கு பருவமழையானது  ஆரம்பத்தில் வலுக்குறைந்து காணப்பட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வலுவடைய தொடங்கியுள்ளது.

சிவகங்கை, மதுரை, விழுப்புரம், திண்டுக்கல் என டெல்டா மாவட்டங்கள் உட்பட 14 மாவட்டங்களில் வரும் 29ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல் 78.8 மி.மீ மழை பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை 39 சதவீதம் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.