காலநிலை மாற்றம்; உள்நாட்டு உற்பத்தியைக் குறைக்கிறது

மனிதர்களால் ஏற்படும் காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் காரணமாக கடந்த ஆண்டு உலகப் பொருளாதார உற்பத்தியில் சுமார் 6.3 சதவிகிதம் குறைந்திருப்பதாக ஆய்வு அறிக்கையில்  மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகம் எடுத்து நடத்தும் 28-வது ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாடு, வரும் நவம்பர் 30 முதல் டிசம்பர் 12, 2023 வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) துபாயில் உள்ள எக்ஸ்போ சிட்டியில் நடைபெறுகிறது.

What we need now from the leadership of COP28 | Climate Crisis | Al Jazeera

இந்த காலநிலை பேச்சுவார்த்தை மாநாட்டுக்கு முன்னதாக புதிய அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, உலகப் பொருளாதாரத்தில் பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்கனவே கோடிக்கணக்கில் இழப்புகள் ஏற்பட்டுள்ளன எனவும், இதில் வளரும் நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என்று தெரிரிவிக்கப் பட்டிருக்கிறது.

அமெரிக்காவில் உள்ள டெலவேர் பல்கலைக்கழகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பது: மனிதர்களால் ஏற்படும் காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் விவசாயம் மற்றும் உற்பத்திக்கு இடையூறுகள், அதிக வெப்பத்தால் உற்பத்தித்திறன் குறைதல், அத்துடன் உலகளாவிய வர்த்தகம் மற்றும் முதலீடுகளில் கசிவு போன்றவற்றில் தாக்கங்களை ஏற்படுத்தி, கடந்த ஆண்டு உலகப் பொருளாதார உற்பத்தியில் 6.3 சதவிகிதம் குறைக்கப்பட்டதாக மதிப்பிட்டுள்ளது. இந்த புள்ளி விவரங்களானது பருவநிலை மாற்றத்தின் நேரடி விளைவுகளை பிரதிபலிக்கிறது.

World economy set to lose up to 18% GDP from climate change | Loop Caribbean News

மேலும், “காலநிலை மாற்றத்தின் காரணமாக டிரில்லியன் கணக்கான டாலர்களால் உலகம் ஏழ்மையில் உள்ளது என்றும் அந்த சுமையின் பெரும்பகுதி ஏழை நாடுகளின் மீது விழுந்துள்ளது” என்றும் டெலவேர் பல்கலைக்கழகத்தின் முன்னணி எழுத்தாளர் ஜேம்ஸ் ரைசிங் கூறுகிறார். இதுமட்டுமின்றி, ஏற்கனவே பல நாடுகள் காலநிலை மாற்றத்தின் காரணமாக பல சவால்களை எதிர்கொண்டு திணறி வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, மனிதர்களால் ஏற்படும் தாக்கங்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், சராசரியான பொருளாதாரத்தை கணக்கிட்ட போது, ​​2022 இல் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தி இழப்பானது 1.8 சதவிகிதமாக உள்ளது. அதாவது, சுமார் 1.5 டிரில்லியன் டாலர்கள் ஆகும்.

இந்நிலையில், குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகள்,  அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகளை விட  மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.3 சதவீத இழப்பை சந்தித்துள்ளன. குறிப்பாக, தென்கிழக்கு ஆசியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.  அவற்றின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முறையே 14.1 சதவீதம் மற்றும் 11.2 சதவீதம் இழந்திருக்கின்றன. அதேபோல், மறுபுறம் கடந்த ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஐரோப்பா கிட்டத்தட்ட 5 சதவீத நிகர லாபத்தைக் கண்டுள்ளது.

கடந்த ஆண்டு எகிப்தில் நடந்த 27 -வது ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாடு பேச்சுவார்த்தையில், காலநிலை பேரழிவுகள் ஆகியவற்றால் இழப்பு மற்றும் சேதங்களை எதிர்கொண்ட நாடுகளுக்கு இழப்பை சமாளிக்க உதவுவதற்காக ஒரு பிரத்யேக நிதியை அமைக்க மாநாட்டில் ஒப்புக்கொண்டன.

கடந்த 30 ஆண்டுகளில் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் காரணமாக அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 21 டிரில்லியன் டாலர் இழப்பை சந்தித்துள்ளன.  இது வளரும் நாடுகளின் 2023 ஆம் ஆண்டின் மொத்த ஜிடிபியில் பாதி ஆகும் என்று கடந்த 30 ஆண்டு அறிக்கை கூறுகிறது.