ரத்தினம் பிசியோதெரபி கல்லூரியில் “அனுகிரஹா” வரவேற்பு விழா

ரத்தினம் பிசியோதெரபி கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான “அனுகிரஹா” என்ற பெயரில் வரவேற்பு விழா நடைபெற்றது.

இதில் முதன்மை விருந்தினராக விஜிஎம் மருத்துத்துவமனையின் நிர்வாக இயக்குநர் சுமன் மற்றும் சிறப்பு விருந்தினராக டிஎன்ஐஎபி தலைவர் கிருஷ்ணகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவின் தொடர்ச்சியாக மாணவர்களின் மருத்துவ அறிவுத்திறன் மேம்பாட்டிற்காக விஜிஎம் மருத்துத்துவமனையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

விழாவில் கிருஷ்ணகுமார் , பிஸியோதெரபி படிப்பின் முக்கியத்துவத்தை குறித்தும் அறுவை சிகிச்சைக்குப்பின் பிஸியோதெரபியின் அவசியத்தை குறித்தும் காணொளி மூலமாக விளக்கக்காட்சி அளித்தார். அதோடு பிசியோதெரபி படிப்பின் மதிப்பு பற்றி தெளிவாக விளக்கமளித்து, புதிய மாணவ மாணவியர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

விழாவின்  இறுதியாக மாணவர்கள் பிசியோதெரபி படிப்பிற்கான உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இவ்விழாவில் கல்லூரியின் அறங்காவலர் ஷீமா , முதன்மை நிர்வாக அதிகாரி மாணிக்கம், முதல்வர் கார்த்திகேயன், துணை முதல்வர் ரோஷிணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.