இந்துஸ்தான் கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் தென் கொரியாவின் ஷின்ஹீ காஸ்டர் & மொபிலிட்டி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்திடப்பட்டது.

நிகழ்வில் கல்லூரி முதல்வர்  ஜெயா மற்றும் ஷின்ஹீ காஸ்டர் & மொபிலிட்டி இயக்குநர் சையத் ஷானு ஆகியோர் ஒப்பந்தத்தில்  கையெழுத்திட்டனர்.

தென் கொரியா ஷின்ஹீ காஸ்டர் & மொபிலிட்டி நிறுவனத்தால்  உருவாக்கப்பட்ட ஒரு தன்னாட்சி மொபைல் ரோபோ-“WONBOT”, உருவாகிய விதம் மற்றும் அதில் செயல்படுத்திய தொழில்நுட்பம் பற்றிய கருத்துக்களை சையத் ஷானு பகிர்ந்து கொண்டார். இந்த ரோபோவை பல கிடங்கு தளவாட இடங்களில்  பயன்படுத்தலாம் என்றார். மேலும், “எதிர்கால ரோபோட்டிக்ஸ்” என்ற தலைப்பில் மெக்கட்ரானிக்ஸ் துறை மாணவர்களுக்குச் சிறப்புரை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து, கல்லூரியின் மெக்கட்ரானிக்ஸ் பொறியியல் துறை மாணவர்களால் உருவாக்கப்பட்ட ரோபோ காட்சிப்படுத்தப்பட்டது.