சிபாகா சார்பில் கே.பி.ஆர் கல்லூரியில் கட்டிடப் பொறியாளர்கள் பயிற்சி முகாம்

பிரபல முன்னனி கட்டிட பொறியியல் சங்கமான  “சிபாகா” (கோவை பில்டர்ஸ் அண்ட் கான்ட்ராக்டர்ஸ் அஸோஸியேஷன்ஸ்) மற்றும், கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் கட்டிட பொறியியல் துறை இணைந்து கட்டிடப் பொறியாளர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாமை நடத்தியது.

இந்நிகழ்வின் சிறப்பம்சமாக “தி அசோசியேசன் ஆப் கன்சல்டிங் சிவில் இன்ஜினியர்ஸ்” கோவை மையத்தின்  தலைவர் சுதாகர் தலைமைவகித்தார். மேலும் கே.பி.ஆர்.பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் ராமசாமி சிறப்புரையாற்றினார்.

இதில் சிபாகா சங்கத்தினை சார்ந்த 70-க்கும் மேற்பட்ட இளம் கட்டிட பொறியாளர்களுக்கு முதல் அமர்வில் பயிற்சி அளிக்கப்பட்டது. பின்னர் இரண்டாம் அமர்வில் “செட்டிநாடு சிமெண்ட் மொபைல் டெஸ்டிங் லேப்” பயிற்சியும் அளிக்கப்பட்டது . தொடர்ந்து கள பயிற்சிக்காக  கே.என்.ஆர் கன்ஷ்ட்ரக்சன் தென்னம்பளையம்  களத்திற்கு அழைத்துச் சென்று நேரடி பயிற்சியும் வழங்கப்பட்டது. அதோடு இப்பயிற்சியானது  சந்தேகங்களை போக்கும் ஓர் விழிப்புணர்ச்சி வகுப்பாகவும் பயனுள்ள வகையில் அமைந்தது.

மேலும் கே.பி.ஆர் கல்லூரியின் கட்டிட அம்சங்கள் மற்றும் கட்டிடயவியல் துறையின் மேம்படுத்தப்பட்ட அதிநவீன ஆய்வுக் கூடங்கள் போன்றவற்றை  சிபாகா குழுவினர் மற்றும் பயிற்சியில் பங்கு பெற்றவர்கள் பார்வையிட்டனர். குறிப்பாக எல் அன் டி நிறுவனத்தின் “எக்ஸ்பீரியன்ஸ் இன்ஜினியரிங் லேப்” வசதிகளை அறிந்துகொண்டனர்.

இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை சிபாக குழுவின் தலைவர் சாகயராஜ், செயலாளர் செந்தில் மற்றும் பயிற்சிக் குழுவின் தலைவர் சின்னாயா உட்பட பலர் செய்திருந்தனர்.