தலைவர் படத்தின் ‘நியூ அப்டேட்’

ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த்தின் 170-வது படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் துவங்க உள்ளது. இயக்குநர் ஞனவேல் இயக்கத்தில், லைகா நிறுவன தயாரிப்பில் உருவாகும் படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.

இந்நிலையில், ரஜினியின் 170-வது படத்திற்கான அப்டேட்டுகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில், சார்பட்டா பரம்பரை புகழ் துஷாரா விஜயன், ரித்திகா சிங், ராணா டகுபதி மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான மஞ்சு வாரியர் மற்றும் பஹத் பாசில் ஆகியோர் நடிப்பதாகப் படக் குழு அறிவித்தது.

அந்த வரிசையில், தற்போது புதிய அப்டேட்டாக., பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர் அமிதாப் பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவலைப் படக் குழு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்புக்குப் பிறகு ரஜினியின் 170-வது படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும், ரஜினியும் அமிதாப்பச்சனும் 32 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படத்தில் இணைவது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.