ஊக்கமருந்து குற்றச்சாட்டு: கமல்பிரீத் கவுருக்கு 3 ஆண்டுகள் தடை

இந்திய வட்டு எறிதல் வீராங்கனையான கமல்பிரீத் கவுர் போட்டிகளில் பங்குபெற மூன்று ஆண்டுகள் தடை விதித்து தடகள ஒருமைப்பாடு பிரிவு உத்தரவிட்டுள்ளது.

டோக்கியோ விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட கவுர், தடை செய்யப்பட்ட ஸ்டானோசோலோல் என்ற ஊக்கமருந்தை  கமல்பிரீத் கவுர் பயன்படுத்தியதற்காக தடகள ஒருமைப்பாடு பிரிவு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

கடந்த மார்ச் 7 அன்று அவரிடம் சேகரித்த மாதிரியில் குறிப்பிட்ட ஸ்டீராய்டு இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, இந்த ஆண்டு மே மாதம் கமல்பிரீத் தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் அவருக்கு தற்போது 3 ஆண்டுகள் தடை விதித்தது